முகப்பு
தமிழ்நாடு

ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதில் தவறில்லை! திருமாவளவன்

காங்கிரஸின் கோரிக்கை குறித்து திருமாவளவன் பேசியது பற்றி...

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:47 AM
தொல். திருமாவளவன் - கோப்புப்படம்
பகிர்:

ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமற்றது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.

Advertisement

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திருமாவளவன் பதிலளித்ததாவது:

”தேர்தல் நேரத்தில் எல்லா கூட்டணியிலும் ஏற்படுவதை போன்ற சலசலப்புதான் எங்கள் கூட்டணியிலும் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்டுள்ளது. முடியுமா? முடியாதா? என்பது பேச்சுவார்த்தையில்தான் முடிவாகும்.

இப்படி கேட்பதாலேயே ஒரு கூட்டணி உடைந்துவிடாது. கூட்டணிக் கட்சி என்கின்ற உரிமையில் காங்கிரஸ் கேட்கிறது. திமுகவின் வெற்றிக்கு பல காலங்களாக உழைத்து வருகிறோம், ஆகையால் இம்முறை அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது.

தமிழ்நாடு அரசியலுக்கு பொருந்தாது என்று முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் தொடரும். இந்த கூட்டணியை உருவாக்கியதிலும் எங்கள் பங்கு இருந்தது. தற்போது இதை பாதுகாப்பதிலும் எங்களுக்கு பங்கு இருக்கின்றது. நாங்களும் அதிகாரத்தில் பங்கு கேட்டு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் கோரிக்கையை வழிமொழிவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

summary

There is nothing wrong with Congress asking for a share in the government! Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments