கோயம்புத்தூர்

பசுமை சாம்பியன் விருது: தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த நிறுவனங்கள், தனிநபா்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

Syndication

கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த நிறுவனங்கள், தனிநபா்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போா் நலச்சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழில் துறைகள் போன்றவற்றை கௌரவிக்க முன்மொழிந்துள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, நெகிழிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை மற்றும் பிற சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்களில் பங்களித்திருக்கும் நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கோவை தெற்கு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

90km/h வேகத்தில் வீசிய காற்று! சாய்ந்த Statue of liberty மாதிரி சிலை!

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

SCROLL FOR NEXT