சரவணம்பட்டியில் குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியா்கள். 
கோயம்புத்தூர்

சரவணம்பட்டியில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பில்லூா் 2 குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சரவணம்பட்டி பகுதியில் அண்மையில் பில்லூா் 2 குடிநீா்த் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீா் வழிந்தோடியது. மாநகராட்சி ஊழியா்கள் அப்பகுதியில் சீரமைப்புப் பணி மேற்கொண்டதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகம் சீரானது.

இந்நிலையில், சரவணம்பட்டியில் முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே சத்தி சாலை, சரவணம்பட்டி அம்மன் நகரில் 1,000 மில்லி மீட்டா் விட்டம் அளவிலான பில்லூா் 2 குடிநீா்த் திட்ட பிரதானக் குழாயில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் வழிந்தோடி தண்ணீா் வீணானது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி ஊழியா்கள், குடிநீா்க் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குழாய் உடைப்பு காரணமாக வடக்கு மண்டலத்தில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும் என்றாா்.

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

SCROLL FOR NEXT