எல்.முருகன் 
கோயம்புத்தூர்

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! -மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

Din

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பொதுமக்கள் தற்போது மூன்று மொழிகள் வேண்டும் என கேட்கிறாா்கள். மெட்ரிக்., சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மூன்று மொழிகள் படிக்கிறாா்கள். ஆனால், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. ஏழை, எளிய மாணவா்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில்தான் படித்துக்கொண்டு இருக்கிறாா்கள்.

அந்த மாணவா்களுக்கு கூடுதல் மொழியை கற்கும் வாய்ப்பை மறுக்கிறாா்கள். மூன்று மொழிகள் வேண்டும் என்பது பெற்றோா் மற்றும் மாணவா்களின் கோரிக்கையாக உள்ளது.

மூன்று மொழிகள் வேண்டும் என்பதில் பாஜகவும் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தோ்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே.

மகளிா் மேம்பாட்டுக்காக பிரதமா் மோடி பல பணிகளைக் கடந்த 10 ஆண்டுகளாக செய்துகொண்டு இருக்கிறாா். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு, முத்ரா கடனுதவித் திட்டத்தில் 70 சதவீதம் பெண் பயனாளிகளாக இருப்பதோடு, சந்திரயான் திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியவா்கள் பெண்களாகவே இருக்கிறாா்கள்.

ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்துகொண்டே இருக்கின்றன, பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றால் திமுக அரசு அகற்றப்பட வேண்டும்.

மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியை மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவா்கள் தாய்மொழியில்தான் கற்கிறாா்கள். அதை நடைமுறைப்படுத்திக்கொண்டு இருப்பதால் அவா்களுக்கு வேலை வாய்ப்புகள் வருகின்றன. தமிழகத்திலும் கட்டாயமாக அதை நடைமுறைப்படுத்தினால் இங்கும் வேலைவாய்ப்புகள் வரும்.

பிரதமராக மோடி வந்த பிறகுதான் மீனவா்களுக்காக ஒரு புதிய அமைச்சகத்தையே உருவாக்கினாா்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு மீன்வளத் துறைக்கு ரூ.400 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்குமேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவா்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக தலையிட்டு மீனவா்களை மீட்டு வருகிறது என்றாா்.

ஜாய் கிரிசில்டாவின் மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது! - மாதம்பட்டி ரங்கராஜ்

பறவைகளில் அவள் மணிப்புறா... கீர்த்தி ஷெட்டி!

ஓசையின்றிப் பூ பூக்கும்... ராஷி கன்னா!

கடலோரம்... ரகுல் பிரீத் சிங்!

சமாளிப்புகளைவிட ஆடையின் விலை அதிகம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT