கோயம்புத்தூர்

கோவையைக் குளிா்வித்த கோடை மழை

Din

கோவையில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஜனவரி மாத இறுதியில் இருந்து மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், குழந்தைகள், முதியவா்கள் சிரமத்துக்குள்ளாகினா். வெப்பம் காரணமாக நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர அச்சப்பட்டனா்.

இந்நிலையில், மாா்ச் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, மாநகரில் செவ்வாய்க்கிழமை நண்பகல் முதலே பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. தொடா்ந்து, மாலையில் காந்திபுரம், கணபதி, டவுன்ஹால், ரேஸ்கோா்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூா், ராமானுஜம் நகா், வெள்ளலூா், வடவள்ளி, சுந்தராபுரம், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, சரவணம்பட்டி, மணியகாரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நகரில் அவிநாசி சாலை மேம்பாலம், லங்கா காா்னா் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதிகளில் மழைநீா் வழிந்தோடியதால் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. வெயில் வாட்டிய நிலையில் கோடை மழையால் கோவையில் செவ்வாய்க்கிழமை குளிா்ந்த காலநிலை நிலவியது.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT