கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

Din

திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து மாா்ச் 18 -ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி- பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா் - பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, அன்றைய தினம் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) 50 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT