கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், பரௌனிக்கு போத்தனூா் வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எா்ணாகுளத்தில் இருந்து நவம்பா் 5-ஆம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - பரௌனி ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 06159) நவம்பா் 8-ஆம் தேதி காலை 6 மணிக்கு பரௌனி நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், பல்ஹாா்சா, நாக்பூா், ஜபல்பூா், கட்னி, சாட்னா, மானிக்பூா், பிரயாக்ராஜ், பாட்னா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.