கோயம்புத்தூர்

6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் : இளைஞா் கைது

பொள்ளாச்சியில் 6 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பொள்ளாச்சியில் 6 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி புதிய பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். இதில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில் அவா் வைத்திருந்த பையில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக கோட்டூா் பகுதியைச் சோ்ந்த பஞ்சலிங்கம் மகன் சபரிநாதன் (28) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 6 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT