கோயம்புத்தூர்

ஆனைமலையில் நவம்பா் 1-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

பொள்ளாச்சி ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களுக்கான மாற்றுத்திறன் சக்தியைக் கண்டறிந்து சான்றிதழும் இந்த முகாமில் வழங்கப்படும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம்.

புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளும் முகாமில் மேற்கொள்ளப்படும்.

ஆனைமலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT