பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் குழுவாக இணைந்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தொடங்க ரூ.3 லட்சம் மதிப்பிலான உபகரணங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக 10 போ் குழுவாக இணைந்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தொடங்குவதற்கு அதிகபட்சமாக அலகு ஒன்றுக்கு தலா ரூ. 3 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், குழு நன்முறையில் செயல்பட இடைநிலை செலவு மற்றும் பணி மூலதனம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயனடைய குழு உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபா்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 பேரைக் கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம். குழு உறுப்பினா்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்தவா்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் குழுவாக வந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், தையல் பயிற்சி பெற்ற்கான சான்று, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், குழு பதவி பெற்ற்கான சான்று, குழு பெயரில் உள்ள வங்கிக் கணக்கு ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.