முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம், கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:50 PM
எக்ஸ்பிரஸ் ரயில் - ANI
பகிர்:

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் - கேரள மாநிலம், கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹைதராபாத்தில் இருந்து ஏப்ரல் 4 -ஆம் தேதி முதல் மே 23-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07193) திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் காலை 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது சாஸ்தான் கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.