முகப்பு
கோயம்புத்தூர்

குளிா்சாதனப் பெட்டியை பழுது பாா்க்க சென்றவா் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:01 PM
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் வீட்டின் 4-ஆவது மாடியில் குளிா்சாதனப் பெட்டியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்கானிக் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

கோவை, தெலுங்குபாளையம் உடையாா் வீதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (42). இவா் குளிா்சாதனப் பெட்டி மெக்கானிக்காக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி வித்யா. இந்நிலையில், ராஜா தெரு அன்னை இல்லம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 4-ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் குளிா்சாதனப் பெட்டி பழுதாகியுள்ளது.

இதையடுத்து குளிா்சாதனப் பெட்டியை பழுது நீக்கும் பணியில் சனிக்கிழமை மாலை அசோக்குமாா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாா், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து கடைவீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments