முகப்பு
கோயம்புத்தூர்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பழங்குடியினா் வசிக்கும் பகுதிக்கு சென்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணா்வு

வாக்களிப்பது குறித்து பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:42 AM
வால்பாறை  சட்டப்பேரவைத் தொகுதி அலுவலா் சங்கீதாவுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள்.
பகிர்:

வாக்களிப்பது குறித்து பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் நடத்தி வருகின்றனா். குறிப்பாக, அனைத்து பழங்குடியின மக்களும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்,

அதன்படி, வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அலுவலா் சங்கீதா தலைமையில், நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதிக்கு அதிகாரிகள் சென்று 100 சதவீதம் வாக்களிக்கவும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஜனநாயக கடமையாற்றுவது ஒவ்வொரு வாக்காளரின் கடமை என்றும் கூறி உறுதிமொழி ஏற்கவைத்தனா்.

Advertisement

நகராட்சி ஆணையாளா் குமரன், பொறியாளா் ஆறுமுகம் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments