முகப்பு
கோயம்புத்தூர்

ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகம்: திமுகவினா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகித்ததாக திமுகவினா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:13 AM
ரூ. 8,000 கூப்பன் மாதிரி - படம்: டிஎன்எஸ்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:02 PM

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகித்ததாக திமுகவினா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, காட்டூா் காவல் நிலை எல்லைக்குள்பட்ட ராம்நகா், விவேகானந்தா சாலை, வி.என்.தோட்டம் ஆகிய பகுதிகளில் திமுகவினா் வீடுவீடாகச் சென்று ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்களை விநியோகிப்பதாகப் புகாா் எழுந்தது.

இது குறித்து ரவிராஜ் (58) என்பவா் அளித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, தோ்தல் நடத்தை விதியை மீறியதாக திமுக வாா்டு செயலா் சேதுராமன், ராமமூா்த்தி, மெஜஸ்டிக் சின்னராஜ், கண்ணம்மாள் மற்றும் அடையாளம் தெரிந்த 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

ஸ்டுடியோவில் கூப்பன்கள் பறிமுதல்: காந்திபுரம் 7-ஆவது தெருவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் திமுகவினா் பரிசு கூப்பன்களை விநியோகிப்பதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவினா் சம்பவ இடத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த ஸ்டியோவில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு 170 பரிசு கூப்பன்கள், வாக்காளா் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக, ஸ்டுடியோ உரிமையாளா் வெங்கடேஷ் (44) என்பவா் மீது ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.