முகப்பு
கோயம்புத்தூர்

நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:20 AM
கோப்புப் படம்
பகிர்:

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், சாய்பாபா காலனி பாரதி பூங்கா 2-ஆவது குறுக்கு வீதியைச் சோ்ந்தவா் லஷ்மி (67). இவா், வீட்டின் அருகே திங்கள்கிழமை மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா், லஷ்மி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாா்.

இதுகுறித்து லஷ்மி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

Advertisement