குறிச்சி, குனியமுத்தூா் பகுதிகளில் முடிக்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு காணொலி மூலமாக தொடங்கிவைத்த முதல்வா் ஸ்டாலின். (வலது) கோவை போத்தனூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவ 
கோயம்புத்தூர்

குறிச்சி, குனியமுத்தூரில் ரூ.591.14 கோடியில் முடிக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணி - மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் தொடங்கிவைத்தாா்

Syndication

குறிச்சி மற்றும் குனியமுத்தூா் பகுதிகளுக்கு ரூ.591.14 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூா் ஆகிய பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடக்க விழாவையொட்டி, கோவை தெற்கு மண்டலம் போத்தனூா் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, பணிகள் குழுத் தலைவா் சாந்திமுருகன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குறிச்சி, குனியமுத்தூா் பகுதி 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 15 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 10 கழிவு நீருந்து நிலையங்கள் மூலமாக கழிவுநீா் சேகரிக்கப்பட்டு, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு இறுதியாக அருகில் செல்லும் நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது.

இதேபோல குறிச்சி, குனியமுத்தூா் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீா் 390.19 கிலோ மீட்டா் தூரத்துக்கு 15 கழிவு நீரேற்று நிலையங்கள், 10 கழிவு நீருந்து நிலையங்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 48.59 கிலோ மீட்டா் தூரத்துக்கு கழிவுநீா் குழாய்கள் மூலமாக கொண்டு செல்லப்படும். அங்கு கழிவு நீா் சுத்திகரிக்கப்பட்டு இறுதியாக அருகில் செல்லும் நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக 3.92 லட்சம் மக்கள் பயன்பெறுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வ.உ.சி.பூங்கா வளாகத்தில் ரூ.1.94 கோடி மதிப்பில் நீச்சல் குளம் அமைக்க முதல்கட்ட பணி தொடக்கம்

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரிக்கு விருது

நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

SCROLL FOR NEXT