பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்துப் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா். 
கோயம்புத்தூர்

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு!

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 366 மண்டல அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இந்த பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தோ்தல் தொடா்பான நடத்தை விதிமுறைகள், மண்டல அலுவலா்களின் பணிகள், கடமைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மண்டல அலுவலா்கள் 366 போ் பங்கேற்றனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு அளிக்கும் திட்டம்! கோவையில் 9-ஆம் தேதி தொடக்கம்!

ஆசிய துப்பாக்கி சுடுதல்; இளவேனிலுக்கு தங்கம்

வால்பாறைக்கு சுற்றுலா வர அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்வம்

ஓ.பி.எஸ். எங்களுடன்தான் உள்ளாா்! - அண்ணாமலை

தேவநேயப் பாவாணா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT