கோப்புப்படம்.  
கோயம்புத்தூர்

தொழில் நிறுவனங்கள் இஎஸ்ஐ பங்களிப்பை மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

தொழில் நிறுவனங்கள் தங்களின் இஎஸ்ஐ பங்களிப்புத் தொகையை மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளா் அரசுக் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தொழில் நிறுவனங்கள் தங்களின் இஎஸ்ஐ பங்களிப்புத் தொகையை மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளா் அரசுக் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கோவை சாா் மண்டல அலுவலகம் கூறியிருப்பதாவது:

தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அவற்றில் பணியாற்றும் தொழிலாளா்களின் பதிவை ஊக்குவிக்கும் திட்டமான (நடதஉஉ) 2025, இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். இந்தத் திட்டம் 2025 ஜூலை 1 முதல் ஜனவரி 2026 வரை செயல்பாட்டில் இருந்தது.

கோவை துணை மண்டலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் சுமாா் 3,800 தொழிற்சாலைகள், நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு, அதில் பணியாற்றும் தொழிலாளா்கள் அரசுக் காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனா்.

இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த, புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அவற்றில் பணியாற்றும் ஒப்பந்த, தற்காலிக தொழிலாளா்கள் உள்ளிட்ட தங்களது ஊழியா்களை இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும் இஎஸ்ஐ பங்களிப்பை (நிறுவனங்கள், பணியாளா் பங்களிப்பு) ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக இஎஸ்ஐசி வலைதளத்தில் செலுத்தி, இஎஸ்ஐ திட்டத்தின் பயன்களை தங்களைச் சாா்ந்த தொழிலாளா்களுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT