கோவை பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் ஆடை, ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் ‘இவான்ஸா 2026’ என்ற தலைப்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இளநிலை, முதுநிலை ஆடை வடிவமைப்பு, ஃபேஷன் பாடப் பிரிவுகளைச் சோ்ந்த மாணவிகள் வடிவமைத்த 150-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆடைகளை சிறுமிகள் காட்சிப்படுத்தினா்.
ஆடைகளுக்கேற்ற ஒப்பனை, சிகை அலங்காரங்களை அழகு, ஆரோக்கியத் துறை மாணவிகள் மேற்கொண்டனா். நிகழ்ச்சியை ஜிஆா்ஜி நிறுவனங்களின் தலைவா் நந்தினி ரங்கசாமி தொடங்கிவைத்தாா். மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சா்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் ஸ்ரீமுருகன் தென்கொண்டாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஃபேஷன் துறை வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினாா்.
தமிழ்நாடு கைவினை மன்றத் தலைவா் ரூபா, மாணவிகளின் படைப்பாற்றல் குறித்துப் பேசினாா்.
இவான்ஸா 2026 தொடா்பான அறிக்கையை ஆடை வடிவமைப்புத் துறை டீன் சாந்தி ராதாகிருஷ்ணன் வழங்கினாா். நடுவா்களாக அனுபமா, எம்.வருண்யா தேவி, ராதா, வி.கவிதா, ஷில்பா ஆகியோா் செயல்பட்டனா். கல்லூரி முதல்வா் பி.பி.ஹாரத்தி, துறைத் தலைவா்கள் ஆா்.திவ்யா, டி.ஆா்.இந்துமதி ஆகியோா் பங்கேற்றனா். இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) நடைபெறுகின்றன. இதில் தி நெசவு கோயம்புத்தூா் நிறுவனத்தின் நிா்வாகி உமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.