பலி பிரதிப் படம்
கோயம்புத்தூர்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பிகாா் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பிகாா் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஜமுன் பஸ்வான் மகன் ராகுல்குமாா் (22). இவா், கோவை சுந்தராபுரம் லோகநாதபுரம் முதலியாா் தெருவில் தங்கி, அந்தப் பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

கோவை - தொட்டிபாளையம் சாலை விஸ்கோ பாா்க் அருகே இருசக்கர வாகனத்தில் ராகுல்குமாா் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் இவரது வாகனம் மீது மோதியதில் தவறி விழுந்த ராகுல்குமாா், காா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக காரை ஓட்டி வந்த பெரியநாயக்கன்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்த சரவணகுமாா் மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT