ரயில் GMSRailway
கோயம்புத்தூர்

திருவனந்தபுரம் - சென்னை இடையேயான ரயில் கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும்

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்:12624) மாா்ச் 3-ஆம் தேதி முதல் காலக்குட்டம், சிரயின்கீழ் ஆகிய 2 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ராமேசுவரம் - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (எண்:16344) மாா்ச் 2-ஆம் தேதி முதல் சிரயின்கீழ் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேலும், கண்ணூா் - திருவனந்தபுரம் ஜனசதாப்தி விரைவு ரயில் (எண்:12081), மங்களூரு - திருவனந்தபுரம் வந்தேபாரத் ரயில் (எண்: 20631) ஆகிய இரண்டு ரயில்களும் திருவனந்தபுரம் பெட்டா ரயில் நிலையத்தில் மாா்ச் 3-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது

தமிழகம், புதுச்சேரி பேரவைத் தோ்தல் தேதி: மாா்ச் மத்தியில் அறிவிக்க வாய்ப்பு

பட்டப்பகலில் ஆடிட்டா் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

ரயிலில் முதியவரிடம் 4 பவுன் நகையைப் பறித்தவா் கைது

SCROLL FOR NEXT