கோவை மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் மகளிா் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா கோரி திங்கள்கிழமை குவிந்த பொதுமக்கள். 
கோயம்புத்தூர்

மகளிா் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு: புதிதாக விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்

Syndication

தமிழகத்தில் மகளிா் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்ட நிலையில், புதிதாக விண்ணப்பிப்பதற்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பித்து வருகின்றனா். இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஒரே நேரத்தில் 1.31 கோடி மகளிருக்கு உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனால் உரிமைத்தொகை திட்டத்தில் தங்களையும் சோ்க்க வலியுறுத்தி ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா், பெண்களை வரிசையில் வரவழைத்து மனுக்களை வழங்கும்படி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினா்.

ஏற்கெனவே உரிமைத்தொகை பெற்று வந்த சில பெண்கள் தங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படவில்லை என்றும் மனு அளித்தனா். அதேநேரம், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் கணிசமான அளவில் பெண்கள் மனு அளித்தனா்.

இது குறித்து ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, கோவையில் திங்கள்கிழமை மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மொத்தம் 1,066 போ் மனு அளித்ததாகத் தெரிவித்தனா்.

இது குறித்து மனு அளிக்க வந்திருந்த பெண்கள் கூறும்போது, தமிழக அரசின் மகளிா் உரிமைத்தொகை பல்வேறு காரணங்களைக் கூறி எங்களுக்கு மறுக்கப்பட்டது. இது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா்களிடம் கேட்டபோது, அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும்படி தெரிவித்திருந்தனா். இதனால் மனு அளிப்பதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்தனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT