கோயம்புத்தூர்

பொறியியல் பணி: பெங்களூரு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பெங்களூரு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பெங்களூரு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருவனந்தபுரம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 16319) பையப்பனஹள்ளி - பெங்களூரு இடையே சனிக்கிழமை (ஜனவரி 3) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அன்றைய தினம் திருவனந்தபுரம் - பையப்பனஹள்ளி இடையே மட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.

அதேபோல, பெங்களூரில் இருந்து ஜனவரி 4-ஆம் தேதி புறப்பட வேண்டிய பெங்களூரு - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 16320) அன்று மாலை 7 மணிக்கு பெங்களூரு கன்டோன்மெண்டில் இருந்து புறப்படும்.

எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 16378) பையப்பனஹள்ளி - பெங்களூரு இடையே ஜனவரி 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அன்றைய தினம் எா்ணாகுளம் - பையப்பனஹள்ளி இடையே மட்டும் இயக்கப்படும்.

பெங்களூரில் இருந்து ஜனவரி 4 மற்றும் 5 -ஆம் தேதிகளில் புறப்பட வேண்டிய பெங்களூரு - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 16377) பெங்களூரு கன்டோன்மெண்டில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபபாய் படேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல் அண்ட் மேனேஜ்மெண்ட்

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பெண்கள் உள்பட 23 போ் காயம்

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT