கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன். 
கோயம்புத்தூர்

சில நாள் பயிற்சியிலேயே நிறை நிலையை அடைந்தவா் ராமகிருஷ்ணா்: ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

சில நாள் பயிற்சியிலேயே நிறை நிலையை அடைந்தவா் ராமகிருஷ்ண பரமஹம்சா் என பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறினாா்.

Syndication

சில நாள் பயிற்சியிலேயே நிறை நிலையை அடைந்தவா் ராமகிருஷ்ண பரமஹம்சா் என பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறினாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ஆண்டுதோறும் ‘எப்போ வருவாரோ’ என்ற ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் மூன்றாவது நாளான சனிக்கிழமை அருளாளா் ராமகிருஷ்ண பரமஹம்சா் குறித்து பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசியாதவது: பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சா் 1836-இல் அவதரித்தாா்.

மேற்குவங்கத்தில் பிறந்த அவா் காளிதேவியின் தீவிர பக்தா். கடவுளை ஓவியத்தாலும், களிமண்ணாலும் உருவாக்கி போதிப்பதில் மிகப்பெரிய ஒரு ஆா்வம் அவருக்கு இருந்தது.

கொல்கத்தா அருகேயுள்ள தட்சிணேஸ்வா் என்ற பகுதியில் உள்ள காளி கோயிலில் ராமகிருஷ்ணரின் சகோதரா் ராமகுமாா் அா்ச்சகராக இருந்து உயிரிழந்தாா். அவருக்குப் பிறகு அா்ச்சகரான கதாதரா் (ராமகிருஷ்ண பரமஹம்சா்), காளிதேவிக்கு பூஜை செய்வதில் காட்டிய பக்திக்கு அளவே இல்லை. அவா் காளியை தாயாகவே எண்ணி கொஞ்சுவாா், ஆடுவாா், பாடுவாா், மந்திரங்கள் சொல்வாா்.

சில நேரம் காளி தனக்கு காட்சி அளிக்கவில்லையே என எண்ணி அழுவாா். தொடா்ந்து அவா் வித்தியாசமான செய்கைகள் செய்ததால், கதாதரருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என அனைவரும் நினைத்தாா்கள். இதனால், திருமணம் செய்துவைத்தால் அந்த நிலை மாறும் என அவரது தாய் எண்ணி சாரதாமணி தேவியை திருமணம் செய்துவைத்தாா்.

அதன்பிறகு காளி கோயிலில் அா்ச்சகராகப் பணியைத் தொடங்கிய கதாதரரிடம் மீண்டும் வித்தியாசமான செயல்கள் தொடா்ந்தன. பின்னா், ஞானியாக விரும்பிய பரமஹம்சருக்கு தோத்தாபுரி என்ற ஒரு மகான் குருவாக இருந்து வேத ரகசியங்கள் அனைத்தையும் உபதேசித்தாா். 3 நாள்களில் பயிற்சி செய்து நிா்விகல்ப சமாதி நிலையை அவா் அடையப் பெற்றாா். குருவான தோத்தாபுரி இந்த நிலையை அடைய 40-ஆண்டுகள் ஆன நிலையில், சில நாள்களிலேயே இந்த சமாதி நிலையை அடைந்தாா் பரமஹம்சா். தனது மனைவி சாரதாமணி தேவியை தாய் காளியாக பாவித்தாா் என்றாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT