வால்பாறை அடுத்த அய்யர்பாடி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனைத் தூக்கிச் சென்று கொன்ற சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உள்பட்ட அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கடந்த 07.12.25. அன்று அஸ்ஸாம மாநிலத்தைச் சேர்ந்த ரோசப் அலி சஜிதா பேகம் இவருடைய மகன் சைபுல் அலாம் வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை தூக்கிச் சென்று தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது அப்பகுதியில் கடந்த ஒரு வாரக் காலமாக அப்பகுதியைச் சிறுத்தை அடிக்கடி உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.
இதனை வனத்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்து முன்னோட்டம் பார்க்கப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடிகளால் உயிர்ச் சேதம் அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து அதனை ஏற்ற வனத்துறையினர் தற்போது கூண்டு வைத்துள்ளனர்.
அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர முடியாத நிலையிலும், பள்ளிக் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அழைத்து வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.