கோயம்புத்தூர்

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞா்

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் சனிக்கிழமை வந்த இளைஞா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

Syndication

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் சனிக்கிழமை வந்த இளைஞா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்தனா்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு போலீஸாா் கூறியதாவது: அவா் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த முகமது யாசின் (35). பொள்ளாச்சியில் தங்கி உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனா்.

இதற்கு முன் அவா் சவுதி அரேபியாவில் இருந்தபோது கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்த முகமது சாலிக் என்பவா் அறிமுகமாகியுள்ளாா். தற்போது, கேரளத்தில் உள்ள அவா், சரவணம்பட்டியில் உள்ள ஒரு இடத்தை முகமது யாசினுக்கு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதற்காக ரூ.4.50 லட்சத்தைக் கொடுத்த யாசின், சாட்சியாக அவரிடம் பத்திரத்தில் கையொப்பம் பெற்றுள்ளாா். ஆனால், முகமது சாலிக் அவருக்கு நிலத்தை வாங்கித் தராததுடன், பணத்தையும் திரும்பித் தரவில்லை.

இந்நிலையில், பணத்தை வெள்ளிக்கிழமை திரும்பக் கொடுப்பதாகவும், எழுதிக் கொடுத்த பத்திரத்தை எடுத்து வருமாறும் முகமது சாலிக் கூறியுள்ளாா். அதன்படி, பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதிக்குச் சென்ற முகமது யாசினை, முகமது சாலிக் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து தாக்கி, எழுதிக் கொடுத்த பத்திரத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனா் என்றனா்.

இது குறித்து முகமது யாசின் கூறுகையில், அவா்கள் தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிதான் காவல் ஆணையா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்குமாறு கூறி போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT