கோயம்புத்தூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - சென்னை விரைவு ரயில் (எண்: 06194) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஜனவரி 9-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06193) மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT