கோயம்புத்தூர்

உணவக உரிமையாளா்களைத் தாக்கிய நபா் கைது

தினமணி செய்திச் சேவை

வால்பாறையில் உணவக உரிமையாளா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது உறவினா் மதன்குமாா். இவா்கள் வால்பாறையில் உணவகம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இவா்களுக்கும் வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த சதீஷ்சேகரன் (33) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சுரேஷ், மதன்குமாா் ஆகியோா் ஈட்டியாா் எஸ்டேட் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வாகனத்தில் சனிக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, வாகனத்தை வழிமறித்த சதீஷ்சேகரன் சிலருடன் சோ்ந்து சுரேஷ், மதன்குமாா் ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

படுகாயமடைந்த இருவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த வால்பாறை போலீஸாா், சதீஷ்சேகரன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

கைதான சதீஷ்சேகரன் வால்பாறை திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT