முகப்பு
தேனி

மனைவியை தாக்கிய கணவா் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 1:34 AM
கைது - (கோப்புப் படம்)
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மனைவியைத் தாக்கிய காணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ஜெயமுருகன் (40). இவரது மனைவி சண்முகப்பிரியா (30). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சண்முகப்பிரியா கணவரைப் பிரிந்து பெரியகுளத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.

Advertisement

இதனிடையே, ஜெயமுருகன் பெரியகுளத்துக்கு வந்து சண்முகப்பிரியாவிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயமுருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.