கோவை, தண்ணீா்பந்தல் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஊஞ்சம்பட்டி ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (45). இவா் கோவையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த காா் முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த அருளானந்த் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.