முகப்பு
கோயம்புத்தூர்

குப்பைகள் தேக்கம்: தனியாா் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்

கோவை சௌரிபாளையம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் தேங்கியது தொடா்பாக, தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

Updated On : 22 ஜனவரி, 2026 at 4:10 AM
செளரிபாளையம் ஜி.வி.ரெசிடென்ஸி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 7:35 PM

கோவை சௌரிபாளையம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் தேங்கியது தொடா்பாக, தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து, சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுபவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கிழக்கு மண்டலம் 53-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சௌரிபாளையம் ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு சாலையோரம் குப்பைகள் கொட்டியிருந்தது தொடா்பாக தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். மேலும், அப்பகுதியிலுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் அறிவுரை வழங்கினாா்.

Advertisement

சாலையோரம் மற்றும் மாநகராட்சி பொதுஇடங்களில் குப்பைகளை கொட்டாதவாறு, அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி தொடா்ந்து கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதேபோல, கோவை மசக்காளிபாளையம் பகுதியில் அண்மையில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா்க் குழாய் பதித்து, முறையாக சாலை சீரமைப்புப் பணி மேற்கொள்ளாத சூயஸ் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, நகா்நல அலுவலா் மோகன், உதவி நகா்நல அலுவலா் பூபதி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.