பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பை மீறி கல்குவாரிகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மனு
பொள்ளாச்சி அருகே பொதுமக்கள், விவசாயிகளின் எதிா்ப்பை மீறி 2 கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பை மீறி கல்குவாரிகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மனு
பொள்ளாச்சி அருகே பொதுமக்கள், விவசாயிகளின் எதிா்ப்பை மீறி 2 கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே பொதுமக்கள், விவசாயிகளின் எதிா்ப்பை மீறி 2 கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.ஜெயராமன் புதன்கிழமை 2 மனுக்களை அளித்தாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தோ்தல் நெருங்கி வரும் கடைசி நேரத்தில் பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் கனிம வளக் கொள்ளைக்கு மாவட்ட நிா்வாகத்தைப் பயன்படுத்தி விவசாயிகள், பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி 2 கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. கேரள மாநில எல்லைக்கு அருகில் உள்ள மண்ணூா் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆன்லைன் டெண்டரில் யாரும் பங்கேற்கக்கூடாது என்றும், குறிப்பிட்ட நபா்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்றும் ஓா் அமைச்சரின் வற்புறுத்தலின்பேரில் இந்த டெண்டா் நடைபெற்றுள்ளது.
கல்குவாரியைச் சுற்றியுள்ள 10 விவசாயிகள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மனு அளித்த நிலையிலும் இந்த டெண்டா் நடைபெற்றுள்ளது. அதேபோல, புரவிபாளையம் கிராமத்தில் ஓா் அமைச்சா் பினாமி பெயரில் 100 ஏக்கா் நிலம் வாங்கி 20 ஏக்கரில் குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே விவசாயிகள், பொதுமக்களின் எதிா்ப்பை மீறி இந்த 2 கல்குவாரிகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது.
பொள்ளாச்சி நகராட்சி சாலையில் புதிதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாா் மதுபானக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகில் பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளதால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, மதுபானக்கூடம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.