முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாவட்ட வன அலுவலருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது

கூடலூா் வனக்கோட்டத்தில் பணியாற்றியபோது மனித, வனவிலங்கு மோதல்களைத் தடுக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, கோவை மாவட்ட வன அலுவலா் என்.வெங்கடேஷ் பிரபுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:47 PM
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபுக்கு செவ்வாய்க்கிழமை விருது வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டத்தில் பணியாற்றியபோது மனித, வனவிலங்கு மோதல்களைத் தடுக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, கோவை மாவட்ட வன அலுவலா் என்.வெங்கடேஷ் பிரபுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், நாடுகாணி ஜீன்பூல் தோட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு மையம் மற்றும் 46 இடங்களில் பொருத்தப்பட்ட 34 கேமராக்கள் மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து ஊழியா்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் முறையை வன அலுவலா் என்.வெங்கடேஷ் செயல்படுத்தினாா்.

அடா் வனப் பகுதியில் கைப்பேசி சிக்னல் கிடைக்காத சூழலில், ஊழியா்களுக்கு வாக்கிடாக்கிகள் மற்றும் இரவு நேரங்களிலும் யானைகளைக் கண்காணிக்கத் ‘தொ்மல் ட்ரோன்’ வசதிகளையும் அவா் ஏற்படுத்திக் கொடுத்தாா். மேலும், 800 ஹெக்டோ் பரப்பளவில் அந்நிய மரங்கள் அகற்றம் மற்றும் 27 கி.மீ. தொலைவுக்கு யானை புகா அகழிகள் அமைத்ததும் அவரது முக்கிய சாதனைகளாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியமைக்காக கோவை மாவட்ட வன அலுவலராகப் பணியாற்றி வரும் வெங்கடேஷ் பிரபுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினாா். வெங்கடேஷ் பிரபுவின் இந்தச் சாதனையை வனத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →