முகப்பு
கோயம்புத்தூர்

த்ரோன் டெவலப்பா் நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்க போலீஸாா் அழைப்பு

த்ரோன் டெவலப்பா் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:46 PM
போலீஸ்
பகிர்:

த்ரோன் டெவலப்பா் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.

கோவையில் த்ரோன் டெவலப்பா் என்ற பெயரில் இயங்கி வந்த கட்டுமான மற்றும் முதலீட்டு நிறுவனம் அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக இந்த நிறுவனத்தின் இயக்குநரான அசோக்குமாா் (38) மீது கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

த்ரோன் டெவலப்பா் நிறுவனத்தில் முதலீடு செய்து, பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் இதுவரை புகாா் அளிக்காமல் இருந்தால் கோவை பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வரலாம். பாதிக்கப்பட்டவா்கள், வங்கிப் பரிவா்த்தனை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →