"இதயநலம்'புத்தகம்இன்று வெளியீடு
ஈரோட்டில் "இதயநலம்' என்னும் புத்தகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.
ஈரோட்டில் "இதயநலம்' என்னும் புத்தகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.
சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவச் சங்க அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தப் புத்தகத்தை சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டி.கந்தசாமி எழுதியுள்ளார். இதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர், தனது மருத்துவப் பணியில் கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.
மாரடைப்பு வருவதற்கான காரணங்கள், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 208 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை ரூ.180. இந்தப் புத்தகத்தை இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.சுகுமார் வெளியிட, முதல் பிரதியை கலை பால் பண்ணை மற்றும் கலை கட்டுமான நிறுவனத் தலைவர் பி.கே.துரைசாமி பெற்றுக்கொள்கிறார்.
Advertisement
Advertisement
சுதா டெஸ்ட் டியூப் பேபி சென்டர் நிறுவனர் தனபாக்கியம் கந்தசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்கிறார். சுதா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்சஸ் இயக்குநர் கே.சுதாகர் நன்றி கூறுகிறார்.