சூர்யா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு அருகே மேட்டுக்கடையில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு அருகே மேட்டுக்கடையில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் சி.இளங்கோ தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் கே.வி.இராமலிங்கம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியது:
Advertisement
Advertisement
கல்வித் துறையில் முன்னேறும் நாடுதான் உலகில் வல்லரசாக மாற முடியும். அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா கல்வித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.17,000 கோடியை இந்தத் துறைக்கு ஒதுக்கியுள்ளார்.
தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றார். விழாவில் 90 மாணவிகள் உள்பட 221 பேருக்கு பட்டம் வழங்கினார். இதில் 5 பேர் பல்கலைக்கழக அளவில் மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.