‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
புது தில்லியில் ‘க்வாட்’ கூட்டமைப்பு கூட்டம் - சீனா விமர்சனம்
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பானது, குறிப்பிட்டதொரு மூன்றாவது தரப்பைக் குறிவைத்தலைத் தவிர்க்க வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.
புது தில்லியில் மே 26-ஆம் தேதி நடைபெற்ற ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த அமைச்சா்கள் பங்கேற்றனர். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், க்வாட் நாடுகள் இடையே முக்கிய கனிமங்கள், எரிசக்தி துறைகலில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வதெனவும், கடல்சார் கண்காணிப்பை ஊக்கப்படுத்தவும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ தளவாடங்கள் வலர்ச்சியடைவதற்கு எதிராக இப்பிராந்தியமெங்கிலும் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவையான புதிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஆராயப்பட்டது.
இவ்விவகாரம் சீனாவை ஆத்திரமூட்டியதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் தெரிவித்ததாவது : “‘க்வாட்’ கூட்டமைப்பு விவகாரத்தில் சீனா தம் நிலைப்பாட்டை பல முறை பதிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பானது பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளமை ஆகியவற்றை நோக்கிய நகர்வாக இருத்தல் வேண்டும்.எந்தவொரு மூன்றாவது தரப்பிஅயும் குறிவைப்பதாக அது இருக்கக்கூடாது. சிறு அணிகள் உருவாவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
Quad : China said it opposes the creation of exclusive “small cliques” and bloc confrontation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.