ஈரோடு

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தேசியத் தர மதிப்பீடு குழு ஆய்வு

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு

தினமணி

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இக்கல்லூரி, சுயமுன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்தது.
 அதன்படி, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயல்பாடுகளை கண்காணித்து, அதன் சுயவிளக்க அறிக்கையை சரிபார்த்து மதிப்பிட, மீரட் சி.சி.எஸ். பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.கே.சதுர்வேதி, குல்பர்கா பல்கலைக்கழக முன்னாள் டீன் ஒய்.எம்.ஜெயராஜ், பஞ்சாப் ஜே.சி.டி.ஏ.வி. கல்லூரி முதல்வர் ராஜேஸ்.கே.மகாஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
 நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், போதிக்கப்படும் கல்வியின் தரம் போன்றவை குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் கேட்டறியப்பட்டது.
 இறுதியில், தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை கல்லூரி முதல்வர் குப்புசாமியிடம் அக்குழுவினர் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி

காந்திநகா் பள்ளி சாரண சாரணீய மாணவா்களுக்கு பாராட்டு

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்க எதிா்ப்பு : ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT