ஈரோடு

ஆகஸ்ட் 8-இல் திராவிட இயக்க கருத்தரங்கு தொடக்கம்

ஈரோட்டில் மதிமுக சார்பில், திராவிட இயக்கக் கருத்தரங்கு ஆகஸ்ட் 8, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார்.

தினமணி

ஈரோட்டில் மதிமுக சார்பில், திராவிட இயக்கக் கருத்தரங்கு ஆகஸ்ட் 8, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார்.

ஈரோடு, பழையபாளையம் குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் இளைஞர்களைத் தேர்வு செய்யும் முகாம் ஈரோடு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, ஈரோடு மாவட்ட மதிமுக செயலர் அ.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணிச் செயலர் வே.ஈஸ்வரன், மாணவர் அணிச் செயலர் தி.மு.ராஜேந்திரன், தொண்டர் அணி இயக்குநர் சு.ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று இளைஞர்களை தேர்வு செய்தனர்.

இதில், தேர்வு செய்யப்பட்ட 300 இளைஞர்களுக்கு பேராசிரியர்கள் ஹென்றி திபேன், பொறியாளர் ஈழவாளேந்தி, வந்தியதேவன், பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் 2 நாள்கள் பயிற்சி அளிக்கின்றனர். இரு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கிலும் வைகோ பங்கேற்கிறார்.

இம்முகாமில், ஈரோடு மாநகரச் செயலர் பொன்னுசாமி, மாநில இளைஞர் அணி துணைச் செயலர் செல்வராஜ், மாணவர் அணி துணைச் செயலர் முகமது சாதிக், தொண்டர் அணி மாநில துணைச் செயலர் முசிறி ரவிசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

SCROLL FOR NEXT