ஈரோடு

குருணை மருந்து சாப்பிட்ட விவசாயி சாவு

பவானி அருகே குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

DIN

பவானி அருகே குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பவானி அருகே உள்ள குட்டமுனியப்பன் கோயிலை அடுத்த கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (60). விவசாயி. இவர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் தோட்டத்தில் பயிருக்கு போடப்படும் குருணை மருந்தைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு, மாரியப்பன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இவரது தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த பருத்திப் பயிர்கள் தண்ணீரின்றி கருகியதாலும், விவசாயத்துக்கு வாங்கிய கடனாலும் வேதனையில் குருணை மருந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பவானி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT