ஈரோடு

ஸ்மார்ட் அட்டை கிடைக்காதவர்கள் ஏப்ரல் 27-க்குள் புகைப்படங்களை ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

DIN

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஸ்மார்ட் அட்டை கிடைக்காதவர்கள் தங்களது புகைப்படங்களை நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் 27-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை விடுத்த செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அச்சிடப்பட்ட ஸ்மார்ட் அட்டை பெற உரிய குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்பட்டது.
அவ்வாறு அனுப்பப்பட்ட ரகசிய குறியீட்டு எண் பெற்ற நாளில் இருந்து 15 தினங்களுக்குள் நியாய விலைக் கடைகளில் சென்று ஸ்மார்ட் அட்டை பெற்றுக் கொள்ளலாம். ரகசியக் குறியீட்டு எண் தவறுதலாக செல்லிடப்பேசியில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் சென்று ஸ்மார்ட் அட்டையை செயல்படுத்திக் கொள்ளலாம். அல்லது பசங்டஈந என்ற செல்லிடப்பேசி செயலில் சென்று ஸ்மார்ட் அட்டையை செயல்படுத்திக் கொள்ளலாம்.
சில குடும்ப அட்டைகளில் சரியான முகவரி இல்லாமை, புகைப்படம் இல்லாததாலும், புகைப்படம் தெளிவாக இல்லாத நிலையிலும் ஸ்மார்ட் அட்டை அச்சடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. புகைப்படம், சரியான விவரங்கள் இல்லாதவர்களின் பட்டியல் நியாய விலைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது புகைப்படத்தை மட்டும் பசங்டஈந என்ற செல்லிடப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
அல்லது நியாய விலைக்கடை விற்பனையாளரிடம் புகைப்படம், விவரங்களை (தமிழில்) ஏப்ரல் 27-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
மேற்கண்ட சரியான விவரங்கள், புகைப்படங்களை வழங்கினால் மட்டுமே ஸ்மார்ட் அட்டை அச்சிட்டு வழங்க இயலும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT