ஈரோடு

அவல்பூந்துறை கோயிலில்  பாலாபிஷேகம்

DIN

அவல்பூந்துறை ஸ்ரீ பாகம்பிரியாள்  புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாக பூஜைகளும் புதன்கிழமை நடைபெற்றது.
கிராமம் செழிக்க வேண்டி ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை பாகம்பிரியாள்  புஸ்பவனேஸ்வரர் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாகபூஜைகளும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.
அவல்பூந்துறை, சோளிபாளையம், வெள்ளியம்பாளையம், கண்டிக்காட்டுவலசு, பள்ளியூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை முதல் விரதம் இருந்து 108 பால் குடங்கள் எடுத்து வந்து அவல்பூந்துறை ஸ்ரீ பாகம்பிரியாள்  புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனர். 
தொடர்ந்து புஷ்பவனேஸ்வரருக்கு  108 குடங்களில் பாலாபிஷேகமும், தீபாராதனையும்  நடைபெற்றது. 
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும்,  பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT