ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 4 பெண் வனவர்கள் நியமனம்

DIN

தமிழக வனத் துறையில் முதன்முதலாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 4 பெண் வனவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வனக் குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண் குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், வனத்தைப் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழகத்தில் 36 பெண் வனவர்கள் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பிரதீபா தலமலை வனச் சரகத்திலும், சூரியா டி.என்.பாளையம் வனச் சரகத்திலும், சண்முகவடிவு ஆசனூர் வனச் சரகத்திலும், கனிமொழி சத்தியமங்கலம் வனச் சரகத்திலும் வனவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட முதன்மை வனப் பாதுகாவலர் அன்வர்தீன், சத்தியமங்கலம் புலிகள் காப்ப கள இணை இயக்குநர் அருண்லால் ஆகியோர் முன்னிலையில் புதிய பெண் வனவர்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனர். தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் சிறப்பாகச் செல்படுவதைப் போல, வனத் துறையிலும் பெண் வனவர்கள் சிறந்து விளங்குவர் என தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT