பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், குன்னாங்கல்காட்டுப் பகுதியில், ஒரு மரத்தில் முதியவர் சடலம் தூக்கிட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தொங்கியது. காஞ்சிக்கோவில் காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், தூக்கிட்டு உயிரிழந்தவர் எல்லீஸ்பேட்டை, மாதாகோயில் வீதியைச் சேர்ந்த ஏசையன் (75) என்பது தெரியவந்தது.
மேலும், இவர் அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் என்பதும், சில மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவி இறந்து விட்டதும், இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.