ஈரோடு

புத்தக விமர்சன நிகழ்ச்சி

ஈரோடு வாசல் மற்றும் நவீன நூலக வாசகர் வட்டம் சார்பில் "புத்தகங்களை பேசுவோம்' என்னும் தலைப்பில் புத்தக விமர்சன நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஈரோடு வாசல் மற்றும் நவீன நூலக வாசகர் வட்டம் சார்பில் "புத்தகங்களை பேசுவோம்' என்னும் தலைப்பில் புத்தக விமர்சன நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நவீன நூலக வாசகர் வட்டத் தலைவர் பி.ரவீந்திரன் வரவேற்றார். நூலகர் மா.ஷீலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
எழுத்தாளர் ஈரோடு அறிவுக்கன்பனின் "தமிழன் என்னும் சொல்லடா தலை குனிந்து நில்லடா' என்னும் நூலை முனைவர் அங்கயற்கண்ணி விமர்சனம் செய்து பேசினார்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் "ஆளண்டப் பட்சி' என்ற நூலை யசோதா பழனிசாமியும், எழுத்தாளர் கனியன்பாலனின் "பழந்தமிழர் சமுதாயமும் வரலாறும்' என்ற நூலை முனைவர் தனபாக்கியமும் விமர்சனம் செய்து பேசினர். இந்நிகழ்ச்சியில் புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஈரோடு வாசல் கட்செவி அஞ்சல் குழுமம் உறுப்பினர் ராஜி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT