இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை சார்பு நீதிபதி என்.ராமநாதன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தார். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.ராஜேந்திரன், செயலர் ஜி.குமரவேல், மூத்த வழக்குரைஞர்கள் கே.சுந்தரமூர்த்தி, குமார் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், சட்டப் பணிகள் குழு சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இனக் கிளர்ச்சி, பேரழிவு, சாதி வன்கொடுமை, வெள்ளம், நிலநடுக்கும், தொழில் அழிவு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டு, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகள் வழங்கப்படும். குடும்ப நலம், வங்கிக் கடன் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், பெண்கள், குழந்தைகள் உரிமைகளைத் தெரிந்துகொள்தல், வாகன விபத்துகளில் இழப்பீடு, கொடுக்கல்,வாங்கல் பிரச்னை மற்றும் ஆலோசனைகள் பெற மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞர்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், கே.விஜயலட்சுமி, தொண்டு நிறுவன நிர்வாகி ஜி.கெளசல்யா, சமூக சேவகி ஏ.தேவகி, சட்டப் பணிகள் குழு இளநிலை உதவியாளர் ஏ.விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.