ஈரோடு

வேன் - இருசக்கர வாகனம் மோதல்: ஒருவர் சாவு

DIN

கோபி அருகே இருசக்கர வாகனம்,  வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
தேனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது நண்பர் பரத் (21). இருவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் - கோபி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் கோபி அருகே, கொளப்பலூர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த வேன் எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.  இருவரும் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், சரவணகுமார் உயர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்,  வழியிலேயே  அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT