சாலை விபத்து: ராணுவ வீரர் சாவு
பவானியை அடுத்த சித்தோடு அருகே சாலை விபத்தில் ராணுவ வீரர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
பவானியை அடுத்த சித்தோடு அருகே சாலை விபத்தில் ராணுவ வீரர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
கோபியை அடுத்த கூகலூர் கொள்ளமடை வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமி மகன் சுந்தரராஜ் (29). இவர், அருணாசல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கவுந்தப்பாடி சாலையில் சக்தி நகர் அருகே சென்றபோது எதிரில் வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த இவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.