முகப்பு
ஈரோடு

கிராம சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்

பணிச் சுமையைக் குறைக்க  வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டத்தில்  திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

பணிச் சுமையைக் குறைக்க  வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டத்தில்  திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
 தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் செந்தாமலர், உஷாராணி, பகுதி சுகாதாரச் செயலர் சாரதாம்பாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தில், பணிச் சுமையைக் குறைக்க வேண்டும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பணிகளில் இருந்து கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  
 இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வெங்கிடு, சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட நிர்வாகி புஷ்பா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →