முகப்பு
ஈரோடு

கொண்டத்து ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயில் குண்டம் விழா

ஈரோடு, கோணவாய்க்கால் கொண்டத்து ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீஅங்காளம்மன் கோயில் சித்திரை குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஈரோடு, கோணவாய்க்கால் கொண்டத்து ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீஅங்காளம்மன் கோயில் சித்திரை குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 
 இக்கோயில் சித்திரை குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம், பௌர்ணமியன்று நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு  10 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
 திங்கள்கிழமை வாஸ்து சாந்தி, செவ்வாய்க்கிழமை அக்னி குண்டம் சுத்தம் செய்தல், புதன்கிழமை பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து அபிஷேக பூஜை, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அக்னி கபாலம் பற்ற வைத்தல், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சீதாள தேவியாகம், பகல் 11 மணிக்கு அம்பாளுக்கு சகல திரவிய அபிஷேகம், 12 மணிக்கு மஹாபூர்ணாஹுதி, இரவு 10 மணிக்கு கோயில் பூசாரி மாது குண்டம் இறங்கியதும், தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். இரவு 1 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 
 திங்கள்கிழமை  காலை முதல் பொங்கல் விழாவும், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை திரவிய மலர் அபிஷேக்தைத் தொடர்ந்து மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. 
 விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →